10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு!! கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது. இதனிடையே தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கட்டாயம் இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் இதற்கான கால அட்டவணையை சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி, 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று அவற்றை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. Related Topics: இன்று வெளியீடு , ஹால்டிக்கெட் Click to comment