விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ?895131664
விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ? சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வரும் விஜயகாந்துக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அ...