இன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டம் தொடக்கம்222254779
இன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலாத் திட்டம் தொடக்கம் செ ன்னை இ ன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மேலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தமிழக அரசு பல திட்டங்களைத் தீட்டி வருகிறது. அவற்றில் ஒன்று தமிழகத்தின் முதல் சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டமாகும். இன்று இந்த திட்டத்தைச் சென்னை துறைமுகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டத்தில் 2 தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாட்கள் சுற்றுலா திட்டமாகும். மற்றொன்று சென்னை துறைமுகத்தில் இருந்து விசாக பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரி வந்து சென்னைக்குத் திரும்பும் 5 நாட்கள் சுற்றுலா திட்டமாகும்.