Posts

Showing posts with the label #IPLT20 #IPL2022

மும்பையில் இன்று ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கோலாகல தொடக்கம்

Image
மும்பையில் இன்று ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கோலாகல தொடக்கம் மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகிறது. இந்தியாவின் முக்கிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 15வது தொடர் பல புதிய சிறப்பம்சங்களுடன் இன்று தொடங்குகிறது. இந்தமுறை  லக்னோ, குஜராத் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. மெகா ஏலத்துக்குப் பிறகு அனைத்து அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள், அறிமுக இளம் வீரர்கள் என பலரும் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். மும்பை, ராஜஸ்தான், டெல்லியை தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் போட்டிகளைக் காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. மார்ச் 31க்கு பிறகு கொரோனா கட்டுபாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாடுவதில் ம