Posts

Showing posts with the label #Cotton | #Prices | #

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை!

Image
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை! நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆர்.சி.எச்.பருத்தி ராகம் குவிண்டாலுக்கு ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே,சமீபத்தில் ஆர்.சி.எச்.பருத்தி ராகம் ஒரு குவிண்டால் ரூ.12,900-க்கும்,கடந்த வாரத்தில் குவிண்டால் ரூ.13,100 என இருந்த நிலையில் தற்போது ரூ.13,950 ஆக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. அதற்க்கு அடுத்து ,டி.சி.எச் ரகம் ரூ.9,569 முதல் ரூ.12,949 வரையிலும்,கொட்டு ரக பருத்தி ரூ.6,098 முதல் ரூ.8,400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்,நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.1 கோடி அளவில் பருத்தி மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.