திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் செயலிழந்து விட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு1170600145
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் செயலிழந்து விட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் செயலிழந்து விட்டது. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட குரல் கொடுப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாநகர அதிமுக சார்பில் மெய்யனூர் பகுதியில் இலவச தையற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 10 நவீன தையல் இயத்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்... மக்களை பற்றியோ மக்கள் பிரச்னைகள் பற்றியோ கவலைப்படாத அரசு திமுக அரசு. தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையிம் ஏமாற்றும் அரசாகவும் திமுக அரசு செயல்படுகிறது. கொரோனா பரவலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள சூழலில் சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. ஆண்டுக்கொருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாத சுமை. டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து சட்டத்தை நிறைவேற்றிய அரசு அதிமுக. யார் நினைத்தாலும்...