6 வயது சிறுவனின் உடல் வாய்க்காலில் சடலமாக மீட்பு!! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்1552609601


6 வயது சிறுவனின் உடல் வாய்க்காலில் சடலமாக மீட்பு!! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள உக்கரம் குப்பன் துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் சிறுவன் ஒருவன் மிதந்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனை மீட்டனர். இதனையடுத்து அங்கு இருந்த கடத்தூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன் முதலுதவி செய்தால் சிறுவன் பிழைக்க வாய்ப்புள்ளதாக கருதி அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதால் முதலுதவி சிகிச்சை பயன் அளிக்காத நிலையில் நீரில் மூழ்கி சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டிருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனைப் பற்றி அப்பகுதியில் யாருக்கும் தெரியாததால் அச்சிறுவன் யார் என்பது குறித்தும் எப்படி வாய்க்காலுக்கு வந்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவன் யார்? எதற்காக வாய்காலுக்கு வந்தார்? இது கொலையா? அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI

Puerto Vallarta Day of the Dead and Halloween Celebration