எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு


எக்ஸ்சேஞ்ச் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு


ஸ்மார்ட்போன் யூசர்கள் பலருக்கும் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அத்தகைய ஆசை உள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஆப்பிள் ஐபோன் வாங்க அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. அதாவது ஏற்கனவே பழைய மாடல் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், புதிய போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டு வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம். உங்களின் பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்சாக கொடுத்துவிட்டு புதிய ஐபோனை வாங்கிக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | ஜியோஃபை ரீசார்ஜ்: ஒரு மாதம் செல்லுபடியாகும் 3 போஸ்ட்பெய்ட் பிளான்கள்

ஆஃபர்களும் தள்ளுபடிகளும் அதிகளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் செகணன்ட் போன்களை விற்பனை செய்யும் இந்தியா iStore, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மீது கவர்ச்சிகரமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. HDFC வங்கி வாடிக்கையாளர்கள் iPhone 13 Pro Max-ஐ ரூ. 3,000 தள்ளுபடியில் வாங்கலாம். இதனுடன் ரூ. 18,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் நீங்கள் பெற்றால், ஸ்மார்ட்போனை ரூ.1,08,900 -க்கு வாங்கலாம். வழக்கமாக  1,29,900 ரூபாய்க்கு இந்த போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதுதவிர HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியா iStore கூடுதல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஐபோன் வாங்கும்போது HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்துங்கள். இதன்மூலம் 3,000 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறுவீர்கள். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் நீங்கள் கொடுக்கும் பழைய ஆப்பிள் ஐபோன் மதிப்பீடு செய்யப்படும். அதில் அனைத்து அம்சங்களும் பொருந்தும்பட்சத்தில் அதிகபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். 

இந்த தள்ளுபடியைப் பொறுத்தவரை ஆப்பிள் ஃபிளாக்ஷிப் ஐபோன் 13 மாடல் இதுவரை கண்டிராத சிறந்த தள்ளுபடிகளில் ஒன்றாகும். இந்த ஸ்மார்போனுக்கு மட்டுமல்லாமல் இந்தியா ஸ்டோர், ஐபோன் 13, ஐபோன் 13 Pro, ஐபோன் 13 Mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 12 Mini மற்றும் iPhone SE 3 அல்லது iPhone SE உள்ளிட்ட அனைத்து iPhone மாடல்களிலும் இதேபோன்ற கேஷ்பேக் மற்றும் பரிமாற்றச் சலுகையை  கொடுக்கப்படுகிறது. iPhone 12-ல், 5,000 தள்ளுபடி வரை உடனடியாக கிடைக்கும். 

மேலும் படிக்க | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: Redmi Note 10T 5G-ஐ வெறும் ரூ. 600-க்கு வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI