அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ!2128615468


அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ!


அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதோ!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த சில வாரங்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு அரசு தான் காரணம் என்று கருதிய பொது மக்கள் பலரும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரமானது இப்போது உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு கடந்த ஒரு சில வாரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் முதற்கட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்தது. இந்த விடுமுறையானது, அவ்வப்போது காணப்படும் நிலைமைகளை கண்காணித்து பின்னர் நீட்டிக்கப்பட்டு வந்து இன்று வரைக்கும் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் 2022ம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியின் அடிப்படையில் வரும் ஜூலை 18ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டுமாக ஜூலை 17 வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அத்தியாவசியமான அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 மட்டுமே செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog