கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திர பாபு1769659358


கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திர பாபு


கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, "கள்ளகுறிச்சி பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஐஜி மற்றும் எஸ்பி உள்ளிட்ட 55 காவலர்கள் 52 பேர் வன்முறையின்போது காயமடைந்துள்ளனர். சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாணவியின் இறப்பில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பெற்றோர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் குற்றப்பிரிவு விசாரணை இருக்கும். மாணவி மரணம் தொடர்பான வழக்கு தனியாகவும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்ட வழக்கு தனியாகவும் விசாரணை நடத்தப்படும். பள்ளிக்கூடத்தை தாக்கியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என விசாரணை நடைபெற்றுவருகிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, "கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்" என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog