விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ?895131664


விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீக்கப்பட்ட 3 உறுப்புக்கள் - தொண்டர்கள் கவலை ?


சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வரும் விஜயகாந்துக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.

அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே என்று கவலைப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கூட விஜயகாந்துக்கு திடீர் என்று மூச்சி திணறல் ஏற்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், ஒரு சூழ தினங்களில் மீண்டும் வீடு திரும்பினார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்து இருகின்றனர். மேலும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI