ஐபிஎல் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்- நியூஸிலாந்து பறந்தார்
ஐபிஎல் 2022 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். சன் ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன, இருப்பினும் மீதியிருக்கும் போட்டியில் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார், தனக்கு குழந்தை பிறக்கப்போகிற காரணத்தினால் அவர் நாடு திரும்பியுள்ளார்.
இதனை சன் ரைசர்ஸ் அணி தனது சமூக ஊடகத்தின் மூலம் உறுதிப்படுத்தியது. அந்த ட்வீட்டில், “எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது குடும்பத்தில் புதிதாக இணைய இருக்கும் உறுப்பினருக்காக நியூசிலாந்திற்கு மீண்டும் பறக்கிறார். கேன் வில்லியம்சன் மனைவியின் சுகப்பிரசவத்துக்காகவும் பாதுகாப்புகாகவும் வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளனர்.
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 65வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் ஒரு உதையை வாங்கியது, ஆனால்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment