அடுத்த 1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!


அடுத்த 1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!! வெளில போனா குடை எடுத்திட்டு போங்க!!


வங்கக்கடலில் மே 7ம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி புயல்’ உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் .

 

வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால்,பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர்,  தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை,ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக் கூடும். அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

Puerto Vallarta Day of the Dead and Halloween Celebration