வங்கி பங்குகள் சரிவு.. கைகொடுத்த மாருதி சுசூகி..!
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை பெரிய அளவில் வெளியேற்றினர்.
2 நாள் தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி, ஆட்டோமொபைல் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
Apr 22, 2022 12:59 PM
Comments
Post a Comment