உஷார்! தென் தமிழகத்தில் இன்று கனமழை! 10 மாவட்டங்களில் அடித்து ஊற்ற போகும் மழை!


உஷார்! தென் தமிழகத்தில் இன்று கனமழை! 10 மாவட்டங்களில் அடித்து ஊற்ற போகும் மழை!


தென் தமிழகம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சதீவு பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ இழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌
மேல்‌ நிலவும்‌ மேலடுக்கு சுழற்சி காரணமாக

14.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, தருமபுரி, திருச்சி,நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய
வாய்ப்புள்ளது.

15.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16.04.2022. 17.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

18.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

14.04.2022: தென்தமிழகம், கேரளா கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌, லட்சத்தீவு பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

Comments

Popular posts from this blog

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI